2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மீனம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மீனம்

மென்மையாக எந்த காரியத்தையும் செயல்படுத்தும் மீன ராசி வாசகர்களே!

 
இந்த குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு வரும் 22.04.2023 முதல் தனஸ்தானத்தில் அமர்வது தொழிலிலும், உத்தியோகத்திலும், பொருளாதாரத்தையும் வியாபார வளமும் பெற செய்வார். நீண்ட நாள் தொய்வாக இருந்து வந்த காரியம் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும் சூழ்நிலை உருவாகும்.

வெளிநாட்டு தொழிலில் முயற்சிகள் நல்ல பலனைப் பெற்றுத் தரும். உறுதியான செயல்பாடுகளை செய்ய துவங்கும் போது சுய முயற்சி அவசியம் இருந்தால் மட்டும் நன்மை அடைய முடியும். பிறரின் ஆலோசனை உங்களின் மனவலிமையை பலவீனப்படுத்தும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு, உங்களின் தனிபட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

முதலீடு இல்லாத தொழிலில்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும், பல நாட்கள் செய்து வந்த தொழிலில் முன்னேற்றமும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். சரியான நேரத்தில் ஒரு காரியத்தை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.

இசை கலைஞர்களின் எதிர்கால வளம், சிறப்பாக அமைய பெறுவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, உங்களுக்கு பெருமையை தேடித்தரும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு உடல் ரீதியான சில அசௌகரியங்கள் ஏற்படும்.

யாரிடமும் ஏமாறாமல் இருக்க, உங்களின் செயல்பாடுகளில் அடிக்கடி கவனம் செலுத்தி வருவது நல்லது. ஆன்மீக தொண்டுகளும், தெய்வ வழிபாடும் உங்களுக்கு நல்ல எதிர் காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். பண வரவு நிறைவாக இருக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடும், தேங்காயில் தேங்காய் எண்ணெய் தீபமும் ஏற்றி வணங்கி வர, உங்களின் எண்ணம் போல் வாழ்வு அமையும். பொருளாதார வளம் உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554